Tuesday, November 1, 2011

பிறர் மீது நமக்கு ஏன் வெறுப்பு வருகிறது?

பிறர் மீது நமக்கு ஏன் வெறுப்பு வருகிறது?
சிலர் மீது நாம் ஏன் காரணமில்லாமல் வெறுப்பை காட்டுகிறோம்?
முதல் காரணம் மற்றவரால் நமக்கு துன்பம் விளையுமோ அல்லது
நம்முடைய சுதந்திரம் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் ஒரு காரணம்
உலகம் பலவிதம்.மற்றவர்களால் நம்முடைய உயிரையோ அல்லது
உடைமைகளையோ இழந்து விடுவோமோ என்ற ஒரு பயமும்
காரணம் .உலகத்தோடு அனுசரித்து போகும் சகிப்புத்தன்மை
குறைபாடும் ஒரு காரணம்.
நம்மிடம் உள்ளதை இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ள மறுக்கும் நம்
சுயநலமும் ஒரு காரணம்
நம் கருத்தை பிறர் மீது திணிப்பதும் பிறர் கருத்துகளை
ஏற்க மறுப்பது மட்டுமல்லாமல் கேட்கவே மறுக்கும் நம் அகந்தை.
எல்லோரின் அன்பையும் எதிர்பார்க்கும் நாம் அதை பிறருக்கு வழங்க
மறுப்பதும் ஒரு காரணம்.
நாம் நன்றாக வாழும்போது
பிறரும் நன்றாக வாழ வேண்டும் என்று நினைக்க மறுப்பதும் ஒரு காரணம்.
இப்படியாக பல காரணங்களை சொல்லிகொண்டே போகலாம்.
எது எப்படியிருந்தாலும் நாம் வாழ்வில் பிற உயிர்கள் மீது அன்பு செலுத்த
கற்றுகொள்ளாவிடில் நாம் வாழ்க்கை துன்பமயமாகவும்
அமைதியற்றதாகிவிடும் என்பது உண்மை. முன்பின் தெரியாதவர்களிடம் காட்டும்
அன்பை,மரியாதையை நம் பெற்றோர்களிடமோ,கூட பிறந்தவர்களிடமோ,உறவினர்களிடமோ, அண்டை வீட்டினரோடோ காட்டுவதில்லை. இந்த பண்பு முதலில் வீட்டிலிருந்துதான் தொடங்கவேண்டும். முடிவில் நம்முடைய பகைவர்களிடம் அந்த அன்பு வெளிப்படும். சுயநலம் இல்லாமல்
அனைவரையும் அனுசரித்து அரவணைத்து செல்பவன்தான் தலைவனாக விளங்குகிறான்.
மற்றவர்களால் விரும்பப்படுகிறான். , மதிக்கப்படுகிறான்.
அனமே சிவம் என்றும் அன்பே சக்தி என்றும் அன்பே கடவுள் என்றும்
அனுதினமும் கடவுளை போற்றி பாடினாலும் அதை நடைமுறை
வாழ்க்கையில் கடைபிடிக்காத வரையில் உண்மையான இறைவழிபாடு
என்று கொள்ள முடியாது. நாமும் முயற்சி செய்வோம்.

No comments:

Post a Comment