Tuesday, January 31, 2012


தமிழ்நாடு  மின்சார  வாரிய  குளறுபடிகள் 

1.மின்  திருட்டை  கட்டுபடுத்த
 நடவடிக்கை  எடுப்பதில்லை 

2.கட்சி  கூட்டங்கள் ,வழிபாடு  தல  விழாக்களுக்கு   
பகிரங்கமாக  மின்சாரம்  திருடபடுவதை   புகார்  தெரிவித்தால்  
கூட  மின்சார  வாரிய  ஊழியர்கள்  கண்டு   கொள்வதில்லை

3.மின்சாரம் இலவசமாக  கிடைப்பதில்லை .
அந்த  நிலையில்  ஏன்  இலவச  மின்சாரம்  
ஒரு  பிரிவினருக்கு  வழங்கி  
அந்த  செலவை  மின்  நுகர்வோர்கள்  
தலையில் கட்டி  மிளகாய்  அரைக்க  வேண்டும் ? 
அரசே அந்த செலவை ஏற்று கொள்ளவேண்டும்  

4.குடிசைகளுக்கு  தரப்படும்  இலவச  மின்சாரம்  பலவகையில்  தவறாக  பயன்படுத்தபடுகிறது . அதை  யாரும்  தடுப்பது  கிடையாது
 .
5.மின்  வாரிய  செயல்பாடுகளை  ஒழுங்கு  முறை  ஆணையம்  சரியாக  கண்காணிக்கவில்லை

6.மின்சார  சட்டம்  சரியாக  முறையாக  நடைமுறைபடுத்த படவில்லை 

7.மின்சார வாரியத்தில்  அப்பட்டமாக  லஞ்சம்  கொடுத்தால்தான்  மின்  இணைப்பு  தரப்படும்  நிலை  உள்ளது லஞ்ச  ஒழிப்பு  துறையினருக்கு யாரும் அஞ்சுவது  கிடையாது 
.
8.மீட்டர்கள்  எப்போதும்  பற்றாக்குறைதான் . மற்ற  பொருட்களும் பற்றாக்குறைதான் . அதை  போக்க  மின்சார  வாரியம்  எந்த  நடவடிக்கையும்  எடுப்பது  கிடையாது . ஒருவர்  மீது  ஒருவர்  குறை  சொல்லியே  தாமதம்  செய்கின்றனர் 

9.மின்  பிரச்சினைகளை  சரி  செய்ய  விதவிதமான  பட்டியல்  வைத்து  லஞ்சம்  வசூலிக்கபடுகிறது 
.
10.குறிப்பிட்ட  சில  தனியார்  நிறுவனங்களிடம்  அதிக  விலைக்கு  மின்சாரம்  கொள்முதல்  செய்வதால்  மின்  வாரியத்திற்கு  ஏற்படும்  நஷ்டம்   நுகர்வோர்  தலையில் சுமத்தபடுகிறது

12.எங்கு  பார்த்தாலும்  ஊழியர்  பற்றாக்குறை . காலி  பணியிடங்களை  நிரப்ப  நடவடிக்கை  எடுப்பதில்லை

13.மின்  விநியோகம்  சரிவர  நடைபெறுவதில்லை . சீரான மின்சாரம் தரபடுவதில்லை. மின் ஏற்ற தாழ்வுகளினால் மின் சாதனங்கள் அடிக்கடி பழுதாகி  நுகர்வோர்கள் பாதிக்க படுகின்றனர். அதற்க்கான நஷ்டஈட்டை  மின்வாரியம் தரவேண்டும் 
கருவிகள்  பராமரிப்பதில்  கவனம்  செலுத்த படுவதில்லை .

14. கூடுதலாக  வசூலிக்கப்படும் வைப்பு தொகைகளுக்கு  வட்டியும்  கொடுப்பதில்லை ,மற்றும்  இதுவரை  எவ்வளவு  வசூலிக்கப்பட்டது  என்ற  விவரமும்  நுகர்வோகளுக்கு  கொடுக்கபடுவதில்லை 

15.மாநிலத்தின்  மின்  தேவையை  முழுமையாக  பூர்த்தி  செய்ய  திட்டங்கள்  ஏதும்  சமீப  காலத்தில்  தீட்டப்படவில்லை 

மாநிலமே   மின்  தட்டுப்பாட்டில்  தத்தளிக்கும்போது  செயல்படவுள்ள  அணுமின்திட்டம்  அரசியல்  காரணங்களுக்காக  கிடப்பில்  போட்டு  பல  லச்சக்கணக்கான  மக்கள்  வேலையின்றி  வறுமையில்  வாடும்  நிலை  ஏற்பட்டும் , பல  லட்சம்  தொழிற்சாலைகள்  மூடும்  நிலைக்கும்  தள்ளப்பட்டும்  எந்த  நடவடிக்கையும்  அரசு  எடுக்காமல்  வெறும் அறிவிப்புகளையும் அறிக்கைகக்ளையும் விட்டுக்கொண்டு  பொதுமக்களின்  மேல்  வரி  சுமைகளை  ஏற்றி  மகிழ்ந்துகொண்டிருக்கிறது 

16.மின்வாரியத்திற்கு கொள்முதல் செய்யப்படும் நிலக்கரி, எரிபொருள் , தளவாடங்கள் 
ஆகியவற்றில் ஊழல் அறவே ஒழிக்கப்டவேண்டும்
.
17. கற்றாலை மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்தி மின் பற்றாக்குறையை குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்

18.நிர்வாகத்தில் நவீன உத்திகள்,பிரச்சினைகளை உடனுக்குடன்  கண்டு ,சரி செய்ய தகுதியான செயல்படும் நிர்வாகிகளை இனம் கண்டு அவர்களை கொண்டு மக்களுக்கு நல்ல சேவை வழங்க  ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கவேண்டும் அவ்வாறு செய்தால் அரசை மக்கள் வாழ்த்துவர் என்பதில் ஐய்யமில்லை..

Sunday, January 29, 2012

இன்று மகாத்மா காந்தி அஞ்சலி தினம்

இன்று மகாத்மா காந்தி அஞ்சலி தினம் 
அவர் கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டு
அவர் படத்தின் மீது பூக்களை பறக்க விடும் புரட்டர்கள் 
நடத்தும் வருடாந்திர சடங்கு 

காக்கைஇட்ட  எச்சங்களை கழுவி இன்று மட்டும் 
காந்தி சிலைகளுக்கு மாலை மரியாதை செய்யப்படும்

காலை 11 மணிக்கு சங்கு ஊதி ஒரு நிமிட 
மௌனம் அனுசரிக்கப்படும் 
அவரின் கொள்கைகளுக்கு சமாதி கட்டியதை
நினைவு கொள்ளும் வகையில் அவர் சமாதியில்
மலர் தூவி ஊழல் பெருச்சாளிகள் வெள்ளை உடை 
தரித்து அஞ்சலி செய்யும் நிகழ்ச்சி நடைபெறும் 

கதராடை அணிந்து கறுப்புபண முதலைகள் 
கைராட்டை சுற்றும் .

தீண்டாமையை ஒழிக்க வந்த காந்தியை
தீண்டாதவர் என கருதி தீர்த்து கட்டி 
தீரா பழியை தேடிகொண்டது ஒரு கூட்டம் 

கள்ளை ஒழிக்க போராடிய காந்தியின் படம் 
போட்ட ருபாய் நோட்டுக்கள் அரசுகள் நடத்தும்
சாராய கடைகளின் கல்லா பெட்டியில்
கண்ணீர் விடுகின்றன 

நம் நாட்டு நெசவாளர்களின் கண்ணீரை துடைக்க 
சுதேசி துணிகளை ஆதரித்து அந்நிய துணிகளை 
எரித்த காந்தியின் கொள்கையை திட்டமிட்டு அழித்தன
ஆள வந்த அரசுகள்
இன்று நெசவாளர்கள் 
வீட்டில் அடுப்பு எரியவில்லை 
அவர்களே தங்களை வறுமை 
என்னும் தீயில் 
எரிந்து சாம்பலாகிராகள் 

காந்தி கண்ட ராமராஜ்யம் 
கனவாகி போய் விட்டது
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை 
கிராமங்களுக்கு விடிவு காலம் இல்லை

காந்தியின் கொள்கையை குழி தோண்டி 
புதைத்தவர்கள் காந்தி வேடமிட்டு 
காந்தியில் கொள்கைகளை அலசி 
ஆராய்ச்சி கட்டுரை எழுதுகிறார்கள்

ஆன்ம பலத்துடன் எதேச்சதிகாரத்தை 
எதிர்க்க காந்தி தொடங்கிய 
உண்ணா விரத  போராட்டம்
இன்று உண்டு கொழுத்த அரசியல் 
பிழைப்பாளர்களுக்கு கேலிக்குரிய 
பொருளாகிவிட்டது
 
காந்தியே உன்னைப்போல் நடிக்ககூட 
ஒரு   மனிதனில்லை   இந்நாட்டில்   
அதற்க்கு   கூட   ஒரு   வெள்ளையனை   அல்லவோ   
நாம்   அணுகவேண்டியிருக்கிறது  ? 

காந்தியே நீ மீண்டும் வருக
உன் கொள்கைகளை இக்காலத்திற்கு ஏற்ற வகையில் 
மாற்றி தருக    


Saturday, January 28, 2012

சிந்திக்க தெரிந்தவன்தான் மனிதன்

சிந்திக்க  தெரிந்தவன்தான்  மனிதன் 

ஆனால் இன்று மனிதன் சிந்திக்கின்றானா  
 என்பது பெரிய கேள்விகுறி

ஒரு தனி மனிதன் பல பேரை கூட்டி நீங்கள் 
ஒரு லட்சம் ரூபாய் என்னிடம் முதலீடு செய்தால்
 நான் ஒரு வருடத்தில் உங்களுக்கு இரண்டு லட்சமாக 
திருப்பி தருவேன் என்று சொன்னால் உடனே பல நூறு பேர்கள் அவனிடம் பல லட்சங்களை கண்ணை மூடி கொண்டு கொடுத்துவிடுகின்றனர்

கொடுத்துவிட்டு அவனிடம் ஒரு ரசீதை பெற்றுக்கொண்டு
அங்கிருந்து சென்றுவிடுவதுடன் வரபோகும் தொகையை நினைத்து மனக்கோட்டை கட்ட ஆரம்பித்து விடுகின்றனர். பணம்  பெற்றுகொண்டவனை வசதியாக மறந்துவிடுகின்றனர் 

இன்னும் சில மூடர்கள்(பேராசைக்காரகள்)  பாடுபட்டு தங்கள் சேமித்து வைத்த மொத்த  தொகையையும் இதுபோன்ற மோசக்காரர்களின் 
வாய்ஜால பேச்சில் மயங்கி கொடுத்துவிடுகின்றனர்.

புறம்பான வழியில் பணத்தை சேர்த்த பல மக்கள் அதிக தொகையை இதுபோன்ற மோசடிகாரபேர்வழிகளிடம்  கொடுத்துவிட்டு அதிக லாபம் கிடைக்கும் என்று நம்பிக்கொண்டு காத்திருக்கின்றனர். 

பல கோடி ரூபாய் சேர்ந்ததும் இந்த மோசடி பேர்வழி மொத்த தொகையையும் சுருட்டிக்கொண்டு தலைமறைவாகிவிட்டபின் எல்லோரும் விழித்துக்கொண்டு குய்யோ முறையோ என்று கூவி கொண்டு காவல்துறைக்கும், நீதிமன்றங்களுக்கும் அலைந்து திரிந்து மீதி வாழ்நாளை துன்பத்திலும் துக்கத்திலும் கழிக்கின்றனர்

படித்தவனும் பாமரனும் இதற்க்கு விதிவிலக்கல்ல என்பது வெட்ககேடான உண்மை 

ஒரு கிலோ கத்திரிக்காய் வாங்குவதற்கு பொறுக்கி பார்த்து புழுத்தல் இல்லாமல், முத்தல் இல்லாமல் வாங்கும் மனிதர்கள் பல லட்ச ரூபாய் முதலீடு செய்யும்போது மட்டும் இதுபோன்று மகுடிக்கு கட்டுப்பட்ட நாகம்போல் ஏன் மதிமயங்கி இவ்வாறு செய்கின்றனர் என்பது 
வேடிக்கையாக உள்ளது


இதுபோன்றுதான் வீடு கட்ட நிலம் வாங்கும்போதும், வீடு வாங்கும்போதும் எதையும் கவனிப்பது கிடையாது.வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு சேமித்த பணத்தை தரகர்களின் மாய பேச்சில் மயங்கி தொலைப்பவர்களின் கூட்டம் பெருகி கொண்டே போகிறது.இவர்களை யார் காப்பாற்றுவது?


சட்டங்கள் ஆயிரம் இருந்தாலும் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை
நன்றாக தெரிந்துவைத்திருக்கும் இந்த கவர்ச்சியான புரட்டர்களிடம் மக்கள் எச்சரிக்கையாக் இருக்கவேண்டும். இல்லையேல் மீள முடியாத சோகத்தில் விழ நேரிடும்.பணத்தையும் தொலைத்துவிட்டு இழந்த பணத்தை பெற மீண்டும் பணத்தை செலவு செய்ய பணம் இல்லாவிடில் என்ன செய்வது.?


எனவே சிந்தித்து செயல்படவேண்டும்.  

ஆனால் கண்ணிருந்தும்  குருடாராகதான் 
மக்கள் செயல்படுவது தொடர்கதையாகவே உள்ளது 
என்பது உண்மை

இதுவரை பல கோடிபேர்கள் பலகோடி ரூபாய்களை மோசடிபேர்வழிகளிடம் இழந்து நடுதேருவிற்கு 
வந்ததை பார்த்தபின்பும் மக்கள் ஏன் திருந்துவதில்லை ?

இதற்கு காரணம் ஒரே பதில்தான்

அதுதான் பேராசை 
குறுக்கு வழியில் பணக்காரனாகிவிடலாம் 
என்று தவறான அணுகுமுறை
இந்த எண்ணமிருக்கும்வரை 
ஏமாறுபவர்களும் இருப்பார்கள் 
ஏமாற்றுகாரர்களும் இருப்பார்கள்

Wednesday, January 25, 2012

குடியரசு தினம் என்றால் என்ன

குடியரசு தினம் என்றால் என்ன?

மக்கள் சாராயம் குடித்து நாசமாக போவதற்கு அரசே கடைகளை திறந்து 
அவர்களை நிரந்தர குடிகாரர்களாக்கி எப்போதும் மயக்க நிலையிலேயே வைக்க வாய்ப்பளித்த மக்களின் முட்டாள்தனத்தை கொண்டாடும் தினம்தான் குடியரசு தினம்.

அன்று என்ன செய்வார்கள்?

நாடு முழுவதும் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் என்று மக்களை பயமுறுத்தி 
சோதனை செய்வது ஒரு சடங்காக ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் 
ஆனால் அப்படியும்  தீவிரவாதிகள் அவர்கள்அனைவரின் கண்களிலும் மண்ணை தூவிவிட்டு எப்படியாவது தங்கள் வெறி செயலை  அரங்கேற்றுவார்கள்.அரசு வழக்கம்போல யார் மீதாவது குற்றம் சுமத்திவிட்டு,உயிரிழந்தவர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கி
அனுதாப அறிக்கைகளை வெளியிட்டு சடங்கை முடித்து கொள்ளுவார்கள்.  

குடியரசு தினத்தால் என்ன நன்மை?

தொலைகாட்சிகளில்மூன்று அல்லதுநான்கு திரைப்படங்கள், பட்டிமன்றங்கள், நடிகர் நடிகை பேட்டிகள்,தேசிய கொடி ஏற்றுதல் போன்ற காட்சிகளை கண்டு மகிழலாம்
தொலைகாட்சி நிறுவனங்கள்  அன்று மட்டும் பல கோடி ரூபாய் கல்லா கட்டும்.  

அரசு ஊழியர்களுக்கு ஒருநாள் விடுமுறை கிடைக்கும் 

அரசியல் கட்சியினர் மனதின் உள்ளே ஊழலை நிரப்பிக்கொண்டு வெளியே வெள்ளை வேட்டி சட்டை அணிந்து தேச பக்தியுடன் தோற்றம் அளித்து தேசிய கொடி ஏற்றி மக்களுக்கு இனிப்பு மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்குவார்கள் மற்றும் தொலைகாட்சி முன்பு முண்டியடித்து கொண்டு போஸ் தந்து அவர்கள சடங்கை முடித்து கொள்ளுவார்கள்.இன்று மட்டும் சுதந்திர போராட்டத்தில் தங்கள் வாழ்வை தொலைத்த தியாகிகளுக்கு மாலை மரியாதை கிடைக்கும்  

குடியரசு தினத்தால் குடி மக்களுக்கு  என்ன நன்மை?

இந்திய மக்களில் பெரும்பாலான மக்களுக்கு உண்ண உணவு கிடையாது, உடுக்க நல்ல துணி கிடையாது,இரவில் தங்க பாதுகாப்பான வீடு கிடையாது நல்ல தரமான கல்வி கிடையாது, சமூக விரோதிகளிடமிருந்து பாதுகாப்பு கிடையாது,நல்லமருத்துவ வசதி கிடையாது. குடும்ப அட்டை கிடையாது,வாக்காளர் அட்டை கிடையாது. பிறப்பிலிருந்து மண்ணுக்குள் போகும்வரை லஞ்சதிலிருந்து விடுதலை கிடையாது பெண்களுக்கும் ,குழந்தைகளுக்கும் வீட்டிலேயும் வெளியிலேயும் பாதுகாப்பு கிடையாது 
 இதுதான் குடியரசு தினம் என்று நம்மை நாமே ஆளும் லட்சணம். 

Tuesday, January 10, 2012

போகியை கொண்டாடுவோம்



நன்மையை நாடும்  நெஞ்சங்களே 
நச்சு  புகையை  உண்டாக்காத  
போகியை  கொண்டாடுவோம்

ஒரு பண்டிகையை கொண்டாட
முதலில் வீட்டை சுத்தம் 
செய்ய வேண்டும்
.
ஆண்டின் முதல் பண்டிகை
பொங்கல் பண்டிகை 
அதை கொண்டாடும் முன் முதல்
 நாள் போகி தினம் 
அந்நாளில் அனுசரிக்கப்பட்டது

அந்நாளில் வீட்டு குப்பைகள் என்பது, 
பிரம்பினால் செய்யப்பட்ட முறம், 
கூடை, துடைப்பம் போன்றவைகளே
அத்தோடு கூட வீட்டை சுற்றி 
வளர்ந்துள்ள சிறு முட்செடிகள் 
உடைந்த மர சாமான்கள்  போன்றவற்றை
அப்புறபடுத்தி நன்றாக உலற வைத்து அத்தோடு 
பழைய  கிழிந்த பருத்தி துணிகளையும் சேர்த்து 
அதிகாலையில் எரித்து சாம்பலாக்குவார்கள்
 
அவைகளில்   ரசாயன கலந்த எந்த பொருட்களும் 
அக்காலத்தில் இல்லாமையால். சுற்றுபுரத்திற்கு
 எந்த பாதிப்பும் இல்லை

ஆனால் இன்று உண்ணும் உணவில் 
ரசாயன உரங்கள், பூச்சிமருந்துகளின் 
கலவை, குடிக்கும் பாலில் நச்சு,
 குடிநீரில்கிருமி நாசினிகள்  
சமைக்கும் பாத்திரங்களில் உலோக நச்சு 
பயன்படுத்தும் அழியா வரம் பெற்ற பிளாஸ்டிக் ,
பயணம் செய்ய பயன்படுத்தும் சைக்கிள் முதல்
 கார் லாரி வரை அனைத்திலும் பயன்படும் ரப்பர் 
இதை தவிர நாம் உணவுக்கு அதிகமாக
 உட்கொள்ளும் மாத்திரைகள் என 
அனைத்தும் நஞ்சாக உள்ளது.

வாகனங்கள் விடும் புகை, வல்லரசுகள் 
உலகம் முழுவதும் வெடித்து மக்களை கொல்லும் 
வெடிகுண்டுகளிலிருந்து வரும் நச்சு புகை ,
ரசாயன ஆயுதங்கள் என ரசாயன 
தொழிற்சாலைகள்  விடும் நச்சு கழிவுகள்
அணு உலை கழிவுகள்  ,
 நச்சு புகைகள் என மனிதர்கள் 
தங்கள் இனத்தின் மீது செய்யும் 
அக்கிரமங்கள் அளவற்றது

கலாச்சாரத்தை அப்படியே நடைமுறை படுத்துகிறோம் 
என்று இன்றைய சமுதாயம் தம்மை தாமே 
சீரழிப்பது  கண்டிக்கத்தக்கது

ஒரு பண்டிகையை கொண்டாடும்போது 
தானும் இன்புறவேண்டும் பிறரும்
இன்புறவேண்டும் அதுதான் பண்டிகை
அதை விடுத்தது தன்னை மட்டும் பற்றி சிந்தித்து
 மற்றவர்கள் நம்மை நிந்திக்கும் அளவிற்கு
நடந்துகொள்வது நாகரீகமற்ற செயல் 
எனவே அனைத்து மக்களின் நல வாழ்வை மனதில் கொண்டு
இந்த போகியை மக்கள் எரித்து கொண்டாடாமல் 
எரியும் விளக்குகளை ஏற்றி வைத்து கொண்டாடட்டும்

நச்சு புகையை விட்டு அனைவரையும் துன்புறுத்தாமல்
நறுமலர் அலங்காரம் செய்து கொண்டாடட்டும்

வீட்டையும் ஊரையும் சுத்தபடுதுகிறேன் என்று
 பிளாஸ்டிக்கையும்  டயர்களையும் எரித்து 
சுற்றுப்புறத்தையும் காற்றையும் மாசு படுத்தும் 
தற்கால கண்மூடிபழக்கம் 
மண் மூடி போகவேண்டும் 

ஆனால்என்ன பட்டும் திருந்தாத பல  ஜென்மங்கள் 
இந்த உலகத்தில் இருக்கும் வரை 
அவர்கள் காதில் இந்த கூக்குரல் விழுமா என்பது
கேள்விக்குறியே