Wednesday, January 25, 2012

குடியரசு தினம் என்றால் என்ன

குடியரசு தினம் என்றால் என்ன?

மக்கள் சாராயம் குடித்து நாசமாக போவதற்கு அரசே கடைகளை திறந்து 
அவர்களை நிரந்தர குடிகாரர்களாக்கி எப்போதும் மயக்க நிலையிலேயே வைக்க வாய்ப்பளித்த மக்களின் முட்டாள்தனத்தை கொண்டாடும் தினம்தான் குடியரசு தினம்.

அன்று என்ன செய்வார்கள்?

நாடு முழுவதும் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் என்று மக்களை பயமுறுத்தி 
சோதனை செய்வது ஒரு சடங்காக ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் 
ஆனால் அப்படியும்  தீவிரவாதிகள் அவர்கள்அனைவரின் கண்களிலும் மண்ணை தூவிவிட்டு எப்படியாவது தங்கள் வெறி செயலை  அரங்கேற்றுவார்கள்.அரசு வழக்கம்போல யார் மீதாவது குற்றம் சுமத்திவிட்டு,உயிரிழந்தவர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கி
அனுதாப அறிக்கைகளை வெளியிட்டு சடங்கை முடித்து கொள்ளுவார்கள்.  

குடியரசு தினத்தால் என்ன நன்மை?

தொலைகாட்சிகளில்மூன்று அல்லதுநான்கு திரைப்படங்கள், பட்டிமன்றங்கள், நடிகர் நடிகை பேட்டிகள்,தேசிய கொடி ஏற்றுதல் போன்ற காட்சிகளை கண்டு மகிழலாம்
தொலைகாட்சி நிறுவனங்கள்  அன்று மட்டும் பல கோடி ரூபாய் கல்லா கட்டும்.  

அரசு ஊழியர்களுக்கு ஒருநாள் விடுமுறை கிடைக்கும் 

அரசியல் கட்சியினர் மனதின் உள்ளே ஊழலை நிரப்பிக்கொண்டு வெளியே வெள்ளை வேட்டி சட்டை அணிந்து தேச பக்தியுடன் தோற்றம் அளித்து தேசிய கொடி ஏற்றி மக்களுக்கு இனிப்பு மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்குவார்கள் மற்றும் தொலைகாட்சி முன்பு முண்டியடித்து கொண்டு போஸ் தந்து அவர்கள சடங்கை முடித்து கொள்ளுவார்கள்.இன்று மட்டும் சுதந்திர போராட்டத்தில் தங்கள் வாழ்வை தொலைத்த தியாகிகளுக்கு மாலை மரியாதை கிடைக்கும்  

குடியரசு தினத்தால் குடி மக்களுக்கு  என்ன நன்மை?

இந்திய மக்களில் பெரும்பாலான மக்களுக்கு உண்ண உணவு கிடையாது, உடுக்க நல்ல துணி கிடையாது,இரவில் தங்க பாதுகாப்பான வீடு கிடையாது நல்ல தரமான கல்வி கிடையாது, சமூக விரோதிகளிடமிருந்து பாதுகாப்பு கிடையாது,நல்லமருத்துவ வசதி கிடையாது. குடும்ப அட்டை கிடையாது,வாக்காளர் அட்டை கிடையாது. பிறப்பிலிருந்து மண்ணுக்குள் போகும்வரை லஞ்சதிலிருந்து விடுதலை கிடையாது பெண்களுக்கும் ,குழந்தைகளுக்கும் வீட்டிலேயும் வெளியிலேயும் பாதுகாப்பு கிடையாது 
 இதுதான் குடியரசு தினம் என்று நம்மை நாமே ஆளும் லட்சணம். 

No comments:

Post a Comment