Saturday, January 28, 2012

சிந்திக்க தெரிந்தவன்தான் மனிதன்

சிந்திக்க  தெரிந்தவன்தான்  மனிதன் 

ஆனால் இன்று மனிதன் சிந்திக்கின்றானா  
 என்பது பெரிய கேள்விகுறி

ஒரு தனி மனிதன் பல பேரை கூட்டி நீங்கள் 
ஒரு லட்சம் ரூபாய் என்னிடம் முதலீடு செய்தால்
 நான் ஒரு வருடத்தில் உங்களுக்கு இரண்டு லட்சமாக 
திருப்பி தருவேன் என்று சொன்னால் உடனே பல நூறு பேர்கள் அவனிடம் பல லட்சங்களை கண்ணை மூடி கொண்டு கொடுத்துவிடுகின்றனர்

கொடுத்துவிட்டு அவனிடம் ஒரு ரசீதை பெற்றுக்கொண்டு
அங்கிருந்து சென்றுவிடுவதுடன் வரபோகும் தொகையை நினைத்து மனக்கோட்டை கட்ட ஆரம்பித்து விடுகின்றனர். பணம்  பெற்றுகொண்டவனை வசதியாக மறந்துவிடுகின்றனர் 

இன்னும் சில மூடர்கள்(பேராசைக்காரகள்)  பாடுபட்டு தங்கள் சேமித்து வைத்த மொத்த  தொகையையும் இதுபோன்ற மோசக்காரர்களின் 
வாய்ஜால பேச்சில் மயங்கி கொடுத்துவிடுகின்றனர்.

புறம்பான வழியில் பணத்தை சேர்த்த பல மக்கள் அதிக தொகையை இதுபோன்ற மோசடிகாரபேர்வழிகளிடம்  கொடுத்துவிட்டு அதிக லாபம் கிடைக்கும் என்று நம்பிக்கொண்டு காத்திருக்கின்றனர். 

பல கோடி ரூபாய் சேர்ந்ததும் இந்த மோசடி பேர்வழி மொத்த தொகையையும் சுருட்டிக்கொண்டு தலைமறைவாகிவிட்டபின் எல்லோரும் விழித்துக்கொண்டு குய்யோ முறையோ என்று கூவி கொண்டு காவல்துறைக்கும், நீதிமன்றங்களுக்கும் அலைந்து திரிந்து மீதி வாழ்நாளை துன்பத்திலும் துக்கத்திலும் கழிக்கின்றனர்

படித்தவனும் பாமரனும் இதற்க்கு விதிவிலக்கல்ல என்பது வெட்ககேடான உண்மை 

ஒரு கிலோ கத்திரிக்காய் வாங்குவதற்கு பொறுக்கி பார்த்து புழுத்தல் இல்லாமல், முத்தல் இல்லாமல் வாங்கும் மனிதர்கள் பல லட்ச ரூபாய் முதலீடு செய்யும்போது மட்டும் இதுபோன்று மகுடிக்கு கட்டுப்பட்ட நாகம்போல் ஏன் மதிமயங்கி இவ்வாறு செய்கின்றனர் என்பது 
வேடிக்கையாக உள்ளது


இதுபோன்றுதான் வீடு கட்ட நிலம் வாங்கும்போதும், வீடு வாங்கும்போதும் எதையும் கவனிப்பது கிடையாது.வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு சேமித்த பணத்தை தரகர்களின் மாய பேச்சில் மயங்கி தொலைப்பவர்களின் கூட்டம் பெருகி கொண்டே போகிறது.இவர்களை யார் காப்பாற்றுவது?


சட்டங்கள் ஆயிரம் இருந்தாலும் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை
நன்றாக தெரிந்துவைத்திருக்கும் இந்த கவர்ச்சியான புரட்டர்களிடம் மக்கள் எச்சரிக்கையாக் இருக்கவேண்டும். இல்லையேல் மீள முடியாத சோகத்தில் விழ நேரிடும்.பணத்தையும் தொலைத்துவிட்டு இழந்த பணத்தை பெற மீண்டும் பணத்தை செலவு செய்ய பணம் இல்லாவிடில் என்ன செய்வது.?


எனவே சிந்தித்து செயல்படவேண்டும்.  

ஆனால் கண்ணிருந்தும்  குருடாராகதான் 
மக்கள் செயல்படுவது தொடர்கதையாகவே உள்ளது 
என்பது உண்மை

இதுவரை பல கோடிபேர்கள் பலகோடி ரூபாய்களை மோசடிபேர்வழிகளிடம் இழந்து நடுதேருவிற்கு 
வந்ததை பார்த்தபின்பும் மக்கள் ஏன் திருந்துவதில்லை ?

இதற்கு காரணம் ஒரே பதில்தான்

அதுதான் பேராசை 
குறுக்கு வழியில் பணக்காரனாகிவிடலாம் 
என்று தவறான அணுகுமுறை
இந்த எண்ணமிருக்கும்வரை 
ஏமாறுபவர்களும் இருப்பார்கள் 
ஏமாற்றுகாரர்களும் இருப்பார்கள்

No comments:

Post a Comment