Saturday, February 11, 2012

மொழி மனிதர்க்கு விழி

மொழி மனிதர்க்கு விழி 
அதைக்கொண்டு பரந்த உலகை ரசித்திடுக 
அதை விடுத்து மொழிகளை குறை கூறுவோர்
இழி பிறவிகளே என உணர் 

கம்பன் வீட்டு கட்டுத் தறியும் கவி பாடும் என்றால் 
பாரதியின் மீசை மட்டும் ஏன் கவிகள் பாடக்கூடாது?

மூன்றடியால் உலகை அளந்த கண்ணனின் கீதையும் 
ஈரடியால் தமிழை அளந்த வள்ளுவனின் குரலான 
குறளும் ஒன்றென்று உணர் 

வள்ளுவனும் வாசுகியும் ஈன்றெடுத்த 
தமிழ் குழவியே குறள் 

மனித பிறவிஎடுத்த ஆண்டாள் மாயவனுடன் கலந்தாள்
மனித பிறவிஎடுத்த மீராவும் கண்ணனுடன் ஒன்றி விட்டாள் 
இறைவனிடமிருந்து வந்த ஆன்மாக்கள் அவனுடன் 
மீண்டும் கலப்பதில் வியப்பேது?

கண்ணிருந்தும் குருடர்கள் உண்டு இவ்வுலகில்
காதிருந்தும் செவிடர்கள் உண்டு இவ்வவனியில் 
வாயிருந்தும்  ஊமைகளை  காணலாம் நம் வாழ்வில்
மனமிருந்தும் சிந்திக்காத மனிதர்களும் உண்டு 
என்பதை நம்மில் எத்தனை பேர் அறிவாரோ ?

உலகில் உள்ளதனைத்தும் 
நாம் அனைவரும்
துய்த்து மகிழவே
அதை தடுத்து அனைத்தும் 
தனக்கு மட்டும்தான் என
உரிமை கோரும்
குள்ளநரிக்கூட்டம் 
யாராக இருந்தாலும் அவர்கள் 
மனித குலத்தின் எதிரிகளே 

சுயநலம் மிகுந்த  மனிதன் தானே 
மற்றொரு மனிதனை அழித்த 
காலம் போய் எந்திரங்கள் கொண்டு 
மற்றவரை அழிக்க நினைத்ததால்தான்
அது போன்ற இழி பிறவிகளை அழிக்க 
புயலாக வந்ததுதான் தானே 

வானில் சிறகடித்து பறக்கும்
பறவைகளை அழிக்கும் மனித 
வேட்டையர்களின் கொட்டத்தை
அடக்க இறைவன் அனுப்பிய 
படையே பறவைக்காய்ச்சல்

தான் மிகுந்த அறிவுள்ளவன் என்று பிதற்றும் 
சில மனிதர்கள்தான்  மனித குலத்தை அழிக்கும் 
அரக்கர்களாக உலகில் வலம் வருகின்றனர் 

அன்பே வடிவாகிய சிவனுக்கு மனிதன் வழங்கிய
வடிவம் நச்சுபாம்பும் திரிசூலமும் 

அனைவரையும் காக்கும் திருமாலுக்கு அவன் வழங்கிய
வடிவம் நஞ்சை கக்கும்  பாம்பு படுக்கையும்,அம்பும் வில்லும்

மனிதனின் மனம் சிந்திப்பது ஒன்றும் 
செய்வது ஒன்றாக இருக்கும் வரையிலும்
இவ்வுலகில் அமைதி புறா பறக்க வழியில்லை   



 
 

2 comments:

  1. வணக்கம்!

    உஙகளுக்கு ஒரு விருது காத்துள்ளது. தயவு செய்து என்னுடைய வலஈப்பூவிற்கு வருகை தாருங்களேன்
    http://www.esseshadri.blogspot.in/2012/02/blog-post_15.html

    ReplyDelete
  2. வணக்கம்!

    உஙகளுக்கு ஒரு விருது காத்துள்ளது. தயவு செய்து என்னுடைய வலைப்பூவிற்கு வருகை தாருங்களேன்
    http://www.esseshadri.blogspot.in/2012/02/blog-post_15.html
    நன்றியுடன்
    காரஞ்சன்(சேஷ்)

    ReplyDelete