Thursday, March 8, 2012

மீண்டும் நமது இந்திய கலாசாரத்திற்கு மாறுவோம்


மீண்டும்  நமது  இந்திய  கலாசாரத்திற்கு  மாறுவோம்

காலையில்  எழுந்ததும்  பல்  துலக்க 
டூத்  ப்ருஷையும் பற்பசையையும் 
பல்லாண்டுகளாக  நாம்  பயன்படுத்தி  வருகிறோம்
 .
விளைவு  ஒவ்வொரு  ஆண்டும்  இதற்காக  மட்டும் 
ஒவ்வொரு குடும்பத்தில்  மக்கள் 
 பல  ஆயிரம்  ரூபாய்களை  தண்டம்  அழுகின்றோம்
 .
அப்படி  இருந்தும்  பற்கள்  கெட்டு  போய்விடுகின்றன

காரணம்  பற்பசையில்  
எந்த  மருத்துவ  குணங்களும்  கிடையாது 
சுண்ணாம்பும்  ,நுரை  வரும்  ஒரு  ரசாயனமும்தான்  உள்ளது 
.
இதைதவிர  சில மாதங்களுக்கு  ஒரு முறை 
டூத் ப்ருஷை   மாற்ற  வேண்டும் 
அதற்க்கு  வேறு  தண்டம் அழ  வேண்டும்

இதனால் பல்லாயிரம் கோடி ரூபாய்களை 
சுலபமாக மேனாட்டு நிறுவனகள் 
நமது நாட்டின் வளத்தை கொள்ளையடித்து கொழுக்கின்றன
  
பல்வலி  என்று  பல் வைத்தியர்களிடம்  சென்றால்
பல ஆயிரங்களை  இழக்க  வேண்டியுள்ளது 
.
ஆனால்  கடந்த  காலங்களில் 
எங்கும் இலவசமாக கிடைக்கும் 
வெறும்  ஆலம்  குச்சி  அல்லது  
வேப்பம்  குச்சிகளால்  பல் துலக்கினர் 

நூறு  வயது  வரை  பற்கள் நன்றாக  இருந்தது 
பல்  நோய்கள்  கிடையாது 
.
இன்று  பிறக்கும்  குழந்தைகளே  
பல் நோயுடனும்   பிறக்கின்றன 
வாலிப  வயதிற்குள் மொத்த  பற்களும்  
சொத்தை  பிடித்து  விடுகின்றன

இனிப்பு  பொருட்களும் , மாவு  பொருட்களும் 
பல்லை  சீரழிக்கின்றன 
இதை  யாரும்  கண்டு  கொள்வது  கிடையாது

ஒவ்வொருவரும் தம்  வாழ்நாளில்  பல்லுக்கு  மட்டும்
பல லட்சங்களை  செலவழிக்கிறார்கள்

அதற்காக  அவர்கள்  கூடுதலாக உழைக்க  வேண்டியிருக்கிறது 
பல் கெட்டு விடுவதால்  கிருமிகள்  உற்பத்தியாகி
முழு  உடல்நலமும்  கேட்டு சம்பாதிப்பது    அனைத்தையும் 
உடலுக்கே  செலவழித்து  மாத்திரைகளை முழுங்கியே
ஆயுளை இக்கால  மக்கள் முடிக்கின்றன 
.
இந்நிலை  மாற  வேண்டுமென்றால் 
மக்கள் வேப்பம் குச்சியை  மெதுவாக 
மென்று பிரஷ்  போல்  ஆக்கி  அதில்  பல்லை துலக்கினால் 
பல்லில்  உள்ள  கிருமிகளும்  சாகும்
பல்லும்  சுத்தமாகும்

வீணான  செலவும்  மிச்சம்  ஆகும் 
உடல்நலமும் காக்கப்படும் 

பலகேட்டு பலமணி நேரம் பல் மருத்துவமனைகளில்
காத்திருக்கும் நேரத்தை விட சில நிமிடங்கள் 
தினமும் பொறுமையாக பல் துலக்கவும் நேரம் 
ஒதுக்கினால் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையை பெறலாம்

அனால்  மேனாட்டு  மோகத்தில்  மூழ்கி  கிடக்கும்  இந்த  சமூகம்   இதை  நிச்சயம்    ஏற்றுகொள்ளாது 

Wednesday, March 7, 2012

இன்று உலக மகளிர் தினம்

இன்று உலக மகளிர் தினம்


எங்கும் கொண்டாட்டம்தான் தான்
மகிழ்ச்சி .மகிழ்ச்சி.மகிழ்ச்சி

ஆனால் இந்த புகழ்ச்சியில்
மயங்கிவிடாதீர்கள் 
பெண்களே
.
இது ஒருநாள் கூத்துதான்

மீதம் 364நாட்களும் நீங்கள் படும் 
அல்லல்கள் மனதில் உள்ளதை 
வெளியில் சொல்ல முடியாமல் 
வெளிவரும் புலம்பல்கள் அப்பப்பா !

மாதத்தில் மூன்று நாட்கள் வாழ்வில்
பெரும்பகுதி உங்களுக்கு போராட்டம்

நீங்கள் பெண் தெய்வங்கள் கோயிலில்
சிலையாக இருக்கும்போது 
வெளியே பெண்ணாக அதுவும் அழகாக 
இருந்துவிட்டால் விலை 
நிர்ணயிக்கப்படும்  பொம்மைகள்
நீங்கள் மெழுகுவர்த்திகள் 
குடும்பத்தின் ஒளிவிளக்கு
நீங்கள் சுமைதாங்கிகள் 
கட்டிட பணியில் செங்கலை 
காலை முதல் மாலை வரையில் 
தலையில் சுமப்பீர்கள்

தாயாக குழந்தையை சுமப்பீர்கள்
கணவன் இல்லை என்றாலும், குடும்பத்தை 
கவனிக்காத குடிகார,சூதாடி வாய்த்த்தாலும் 
குடும்ப பாரத்தை சுமப்பவர்கள்

இடி தாங்கிகள்
வீட்டிலும் வெளியிலும் ஏச்சுக்களையும்,
கேட்க முடியாத பேச்சுக்களையும் கேட்டுக்கொண்டு
மனதை கல்லாக்கி கொண்டு சிரிக்கும் மேகங்கள்

எல்லாவற்றையும் சுமப்பதால் 
உங்களுக்கு சுமங்கலிகள் என்று 
பெயர்  சூட்டினரோ?
குங்குமம் நெற்றியில் இருந்தால் சுமங்கலி
குங்குமம்  அழிந்தால் உங்கள் பெயர் அமங்கலி
எங்கும் பாதுகாப்பில்லை எவ்வயதிலும் 
பாதுகாப்பில்லை உனக்கு 
ஆனால் ஆண்களால் மட்டுமல்ல 
ஆணாதிக்க புத்தி கொண்டு
பெண் வடிவம் தாங்கிய 
பெண்களாலும் தான் 

நீ நினைத்த ஆணை மணக்க
உனக்கு அனுமதியில்லை
நகை மீது மோகம் கொண்டால்
உன் உயிருக்கு 
உத்தரவாதமில்லை

ஆனால் நீ அணியும் தங்க நகைகளுக்கு 
ஹால் மார்க் உத்தரவாதம்  கேட்கிறாய்
என்னே விந்தை!

பெண் பாலாக இருப்பதால் பாலியல் 
கொடுமைக்கு ஆளாகிராய், ஆளாக்கப்டுகிறாய் 
இதற்க்கு காரணம் ஆண்கள் மட்டுமல்ல
உங்களில் பாதியான பாதிக்கப்பட்ட
ஆண்களும்பெண்களும்தான். 

பெண்களே நதிகளுக்கு 
உங்கள் பெயரை சூட்டினர்
அதனால்தான் நதிகளில்
சாக்கடைகள் இன்று கலந்து
 நதிகளுக்கும் சாக்கடைகளுக்கும் 
வேறுபாடு தெரியாமல் போய்விட்டது. 


சாக்கடைகளை யார்
சுத்தம் செய்வது?

ஒழுக்கமாக இருங்கள்
மனம் இறுக்கமாக இருக்காதீர்கள்
உணர்வுகளை கட்டுபடுத்துங்கள்.

எதிர்கால உலகம் உங்கள் 
குழந்தைகளை நீங்கள் ஒழுக்கமாக 
வளர்ப்பதில்தான் உங்கள்
எதிர்காலம் உள்ளது 
என்பதை மறந்துவிடாதீர்கள்