Thursday, October 11, 2012

புத்தனும் புத்த பிக்குகளும்


புத்தனும் புத்த பிக்குகளும்













புத்தனும் புத்த பிக்குகளும் 

(படம்-கூகுல்-)

புலனடக்கம் உள்ளவனே புத்தன் 
புலனடக்கம் இல்லாதவன் பித்தன் 

தலையை மொட்டை அடித்துகொண்டால் 
மட்டும் போதுமா புத்த பிக்குகளே 
தடம் தவறி பேசாமலும் இருக்கவேண்டும்

உலகில் எங்கோ ஒரு மூலையில் இருந்துகொண்டு 
மற்றவரை அழிக்க நினைத்தால் 
அப்பாவி உயிர்கள்தான் போகும் 
அந்த பாவம் உங்களைதான் சேரும் 

பேசுவதற்கு முன்னும் ஏசுவதற்கு முன்னும் 
பார்க்க வேண்டும் முன்னும் பின்னும்
சிலைகளை பூசிப்பதால் மட்டும் 
வராது ஞானம் 
காவி வேட்டி கட்டி துறவிபோல் 
வேடமிட்டு யாசிப்பதால் மட்டும் போகாது அஞ்ஞானம் 

பொறுப்பில்லாமல் பேசுபவன் பலரின்
வெறுப்புக்குள்ளாவான் ,வேதனைப்பட்டு மடிவான் 

போதி மரத்தடியில் ஞானம் பெற்றான் புத்தன் 
ஆசையே  துன்பத்திற்கு காரணம் என்றான் 
புலனடக்கம் தேவை என்றான் 
ஆசையை விட்டுவிடு ,வேசையைபோல் 
அலைந்து திரியாதே என்று சொன்னான்

உயிரை கொல்லாதே ,அவைகளிடம் 
அன்பு காட்டு என்றான் 
அவன் கடவுளை பற்றி பேசவில்லை 
இந்த உலகின் நிலையாமையை 
பற்றி மட்டும் பேசினான் .

புத்தன் காட்டிய வழி பிற்காலத்தில் மதமாக வளர்ந்தது
இந்து மத கலாசாரத்தை தழுவி
புத்தன் சிலைகளும் விஹாரங்களும் பல்கி பெருகின 
உலகமெங்கும். 

ஆனால் அந்தோ அவன் காட்டிய அன்பு வழி மட்டும் 
குழி வெட்டி அவன் சிலைக்கு அடியில்  புதைக்கப்பட்டுவிட்டது. 

நாவடக்கமின்றி வன்முறையை தூண்டுகின்றார்
நாடாளும் அரசனின் துணையோடு
நாட்டு மக்களை வதைக்கின்றார் .
அனைவரின் நலம் நாடவேண்டிய புத்த பிக்குகள்.

அவர்கள் மீது மட்டும் குற்றம் சொல்லி பயனில்லை 
அவர்களும் மனிதர்களே.
 உள்ளத்தை மாற்றிகொள்ளாமல் 
உடலின் தோற்றத்தை மட்டும் மாற்றிகொண்டவர்கள்.
எப்படி தப்புவார்கள் உணர்ச்சிகளிடமிருந்து? 

1 comment: