Saturday, January 26, 2013

குடியரசு தினம் என்றால் என்ன?Republic Day greetings 2013

2012 ஆம் இட்ட பதிவு

2013 ஆம் ஆண்டு நிலைமை அதேதான்

மேலும் பல்லாயிரம் கோடி ருபாய் ஊழல்கள் வெளி வந்ததுதான் இந்திய மக்கள் கண்ட பலன். 

விலைவாசி வானை முட்ட உயர்ந்ததுதான் 

மின்வெட்டு தினசரி கதையாகிவிட்டது. 

வாழ்க குடியரசு ஜனநாயகம்

ஏனென்றால் சர்வாதிகாரம் என்றால் பேச்சுரிமை எழுத்துரிமை பூஜ்யமாகிவிடும். WEDNESDAY, JANUARY 25, 2012

குடியரசு தினம் என்றால் என்ன

குடியரசு தினம் என்றால் என்ன?

மக்கள் சாராயம் குடித்து நாசமாக போவதற்கு அரசே கடைகளை திறந்து 
அவர்களை நிரந்தர குடிகாரர்களாக்கி எப்போதும் மயக்க நிலையிலேயே வைக்க வாய்ப்பளித்த மக்களின் முட்டாள்தனத்தை கொண்டாடும் தினம்தான் குடியரசு தினம்.

அன்று என்ன செய்வார்கள்?

நாடு முழுவதும் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் என்று மக்களை பயமுறுத்தி 
சோதனை செய்வது ஒரு சடங்காக ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் 
ஆனால் அப்படியும்  தீவிரவாதிகள் அவர்கள்அனைவரின் கண்களிலும் மண்ணை தூவிவிட்டு எப்படியாவது தங்கள் வெறி செயலை  அரங்கேற்றுவார்கள்.அரசு வழக்கம்போல யார் மீதாவது குற்றம் சுமத்திவிட்டு,உயிரிழந்தவர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கி
அனுதாப அறிக்கைகளை வெளியிட்டு சடங்கை முடித்து கொள்ளுவார்கள்.  

குடியரசு தினத்தால் என்ன நன்மை?

தொலைகாட்சிகளில்மூன்று அல்லதுநான்கு திரைப்படங்கள், பட்டிமன்றங்கள், நடிகர் நடிகை பேட்டிகள்,தேசிய கொடி ஏற்றுதல் போன்ற காட்சிகளை கண்டு மகிழலாம்
தொலைகாட்சி நிறுவனங்கள்  அன்று மட்டும் பல கோடி ரூபாய் கல்லா கட்டும்.  

அரசு ஊழியர்களுக்கு ஒருநாள் விடுமுறை கிடைக்கும் 

அரசியல் கட்சியினர் மனதின் உள்ளே ஊழலை நிரப்பிக்கொண்டு வெளியே வெள்ளை வேட்டி சட்டை அணிந்து தேச பக்தியுடன் தோற்றம் அளித்து தேசிய கொடி ஏற்றி மக்களுக்கு இனிப்பு மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்குவார்கள் மற்றும் தொலைகாட்சி முன்பு முண்டியடித்து கொண்டு போஸ் தந்து அவர்கள சடங்கை முடித்து கொள்ளுவார்கள்.இன்று மட்டும் சுதந்திர போராட்டத்தில் தங்கள் வாழ்வை தொலைத்த தியாகிகளுக்கு மாலை மரியாதை கிடைக்கும்  
குடியரசு தினத்தால் குடி மக்களுக்கு  என்ன நன்மை?

இந்திய மக்களில் பெரும்பாலான மக்களுக்கு உண்ண உணவு கிடையாது, உடுக்க நல்ல துணி கிடையாது,இரவில் தங்க பாதுகாப்பான வீடு கிடையாது நல்ல தரமான கல்வி கிடையாது, சமூக விரோதிகளிடமிருந்து பாதுகாப்பு கிடையாது,நல்லமருத்துவ வசதி கிடையாது. குடும்ப அட்டை கிடையாது,வாக்காளர் அட்டை கிடையாது. பிறப்பிலிருந்து மண்ணுக்குள் போகும்வரை லஞ்சதிலிருந்து விடுதலை கிடையாது பெண்களுக்கும் ,குழந்தைகளுக்கும் வீட்டிலேயும் வெளியிலேயும் பாதுகாப்பு கிடையாது 
 இதுதான் குடியரசு தினம் என்று நம்மை நாமே ஆளும் லட்சணம். 

Monday, January 21, 2013

மோசடியில் சிறந்த தமிழ்நாடு இன்று


    கல்வியில் சிறந்த தமிழ்நாடு -மஹாகவி பாரதி பாடி வைத்தான் அன்று 
    மோசடியில் சிறந்த தமிழ்நாடு இன்று 

இன்றையாய தினமலர் செய்திகள் 


    தினம் தினம் அரங்கேரும் புதிய நூதனமான மோசடிகள் 
    பேராசையால் ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் ஏமாறும் தமிழ் மக்கள் 
    பட்டும் திருந்தாத ஜென்மங்கள். 

Sunday, January 6, 2013

மாதர்தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்


மாதர்தம்மை இழிவு செய்யும் 
மடமையை கொளுத்துவோம்

மாதர்(தம்மை )இழிவு செய்யும் மடமையை 
கொளுத்துவோம் என்றான் பாரதி சென்ற நூற்றாண்டிலேயே 

ஆனால் பெண்கள் மீதான ஆண்களின் (பெண்களையும் சேர்த்துதான் )பார்வை அன்றும் மாறவில்லை இன்றும் மாறவில்லை. 

ஒரு சம்பவம் நடந்துவிட்டால் அதுவும் ஊடகங்களின் 
உதவியால் விளம்பரப்படுதப்பட்டால் உலகமே 
கொந்தளிக்கிறது. சில வாரங்களுக்கு. 

சில மாதங்களுக்கு முன் அஸ்ஸாம் மாநிலத்தில்
நடந்த சம்பவம் அப்படியே அமுங்கி போய் விட்டது.

கற்பழிப்பு சம்பவங்கள் இல்லாத ,பெண்களை இழிவு படுத்தும், சிறுமைபடுத்தும், கொடுமைபடுத்தும் காட்சிகள் இல்லாத திரைப்படங்கள் உண்டா?அல்லது பத்திரிகைகள் உண்டா,தொலைகாட்சி தொடர்கள் உண்டா? என்றால் கேள்விக்கு இல்லை என்ற பதில் தான் வரும்.

அரசு முதலில் இது போன்ற காட்சிகளுக்கு முழு தடை விதிக்கவேண்டும். 
ஆபாச வசனங்கள், பாடல்கள் போன்றவற்றை தடை செய்ய வேண்டும். 

ஆணும் பெண்ணும் சமம் என்ற உணர்வினையும், பெண்கள் போக பொருட்கலல்லர் என்ற உணர்வினையும் சிறு வயதிலிருந்தே பள்ளியில் போதிக்கவேண்டும். 

போதிக்கும் ஆசிரியர்களும், ஆளும் வர்க்கமும் இந்த நெறியை கடைபிடிக்கவேண்டும்.

அதை விடுத்து சட்டங்களை இயற்றுவதும், போராட்டங்கள் நடத்துவதும் எந்த பலனையும் அளிக்க போவதில்லை.

ஒழுக்க கல்வி பள்ளி கல்வி பாடத்தில் இடம் பெறவேண்டும்
ஒழுக்கம் கெட்டுவிட்டதுதான் இத்தனை சீர்கேடுகளுக்கும் காரணம்
.
தவறு செய்யும் லட்சக்கணக்கான் அயோக்கியர்கள் நம் நாடெங்கும் பரவியிருக்கிறார்கள். ஏதோ ஒரு சிலரை தண்டித்தால் மட்டும் சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு ஏற்பட்டுவிடும் என்பது பகல் கனவு. 

பெண்களுக்கு எந்த இடத்திலும் பாதுகாப்பு இல்லை 
பல நேரங்களில் அவர்களை வேலிகளே சூறையாடுகின்றன. 

திருவள்ளுவரின் குள்-ஒழுக்கத்தை உயிரைப்போல 
பேணவேண்டும். இல்லாவிடில் இதுபோன்ற செயல்கள் தவிர்க்கமுடியாது.  


Saturday, January 5, 2013

வாய் சொல்லில் வீரன் தமிழன்


வாய் சொல்லில் வீரன் தமிழன்

வாய்  சொல்லில் வீரன் தமிழன்
எப்படி?

அவனால் எந்த பிரச்சினையை தீர்க்க முடிந்தது?
ஈழ தமிழர் பிரச்சனையா?
காவிரி நீர் பிரச்சினையா?
பாலார் வறண்டு பாலைவனமாய் போன பிரச்சினையா?
இல்லை தற்போது இரு மாநிலங்களை ஆட்டி வைக்கும்
முல்லை பெரியார் பிரச்சினையா?
தமிழக மீனவர் பிரச்சினையா/
இன்னும் இது போன்ற பல பிரச்சினைகள் மிக சுலபமாக
தீர்ந்துவிடும்


ஆனால் உண்மையான பிரச்சினையே சுயநலம் பிடித்த
அரசியல் கட்சிகளும் தமிழ் நாட்டின் மீதோ,அல்லது  மக்களின் மீதோ
சிறிதும் அக்கறையில்லாமல் ஆனால் அக்கறையிருப்பதுபோல் காட்டிக்கொண்டு வெற்று அறிக்கைகளையும் வெட்டி போராட்டங்களையும்
நடத்திக்கொண்டு மக்களை ஏமாற்றிகொண்டிருக்கும் ஒரு கூட்டம்தான்


இரண்டாவது எதற்கெடுத்தாலும் உணர்ச்சி வசப்படும் தமிழன்
வேகம் வந்த நேரத்திலேயே வெத்து வேட்டாகிவிடும் அவன் உணர்வு


இவர்கள் எந்த காலத்திலும் எந்த பிரச்சினைக்கும் ஒன்று சேரமாட்டார்கள்.

இவர்களால்தான் ஒன்றுமறியாத அப்பாவி தமிழ்மக்கள்
ஏமாற்றபடுகிறார்கள்

உழைக்கும் தமிழர்கள் நன்றாக உழைத்து தமிழ் நாட்டை வளம் கொழிக்க
வைக்கிறார்கள்

ஆனால் அவர்களை சுரண்டி பிழைக்கும் சிறிய அளவிலான கூட்டம்
அவர்களை அவர்களின் உழைப்பின் பயனை அனுபவிக்க முடியாத
நிலையில் வைத்துள்ளது மிக கொடுமை

ஒரு சில தலைவர்கள் ஒட்டுமொத்த தமிழர்களையும் மோசடி
செய்துகொண்டிருக்கின்றனர்

கேட்டால் சொல்வார்கள்.நாங்கள் கல்வியை இலவசமாகினோம்
வாழ அனைத்து உதவிகளையும் இலவசமாக அரசு சார்பில் அளிக்கிறோம்
மக்கள் முன்னேறிவிட்டார்கள் என்று

மக்களை போதைக்கு அடிமையாகி அவர்களின் உழைப்பினால் கிடைத்த
பணத்தை உறிஞ்சி அவர்களுக்குக்கு இலவசங்களை அளிப்பதால் என்ன  பயன்?

அரசுக்கு பெருகிவரும்,குற்றசெயல்கள்,மருத்துவம்,,சுகாதார கேடு,
சமூகத்தில் குடும்ப அமைப்புகள் சீர்கேடு ஆகியவற்றால் செலவுகள்
தேவையற்ற ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை

அந்த பணத்தை ஆக்க பூர்வமான வகையில் செலவு செய்ய
வாய்ப்பில்லாமல் போகின்றதை யாரும் மறுக்க முடியாது


உண்மையில் நம் யார் கையையும் ஏந்த அவசியமில்லை
ஒவ்வொரு ஆண்டும் மழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது
மொத்த தண்ணீரும் கடலில் வீழ்ந்து வீணாகிபோகிறது
இந்த வீணாகி போன மனிதர்கள் ஆளும் அரசுகளாலே

.
தண்ணீரை சேமிக்க புதிய நீர்தேக்கங்களோ ,
தடுப்பு அணைகளோ எந்த அரசுகளும்
கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை

நிலத்தடி நீர் தேங்க விடாமல் ஆற்று மணலை
சுரண்டி விற்று கொள்ளை லாபம் பார்த்ததுதான் 
இவர்கள் தமிழர்களுக்கு ஆற்றிய உதவி

இருக்கின்ற அனைத்து நீர் நிலைகளையும் அழித்தது மட்டுமல்லாமல்
வருடா வருடம் வெள்ளம், வறட்சி போன்ற நிகழ்வுகளில் பல்லாயிரம் கோடி ரூபாய்களை உதவியாக அளித்துவிட்டு அத்தோடு தங்கள் கடமைகளை
முடித்துகொண்டதுதான் இவர்கள் நம்மை ஆண்ட பலன்
.

நம்மை சுற்றி இருக்கின்ற அனைத்து மாநிலங்களும்
கணக்கற்ற அணைகளை கட்டி தண்ணீரை சேமித்து கொண்டனர்
அதையும் மீறி ஒவ்வொரு ஆண்டும் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து
வீணாகி கொண்டிருக்கிறது அதை தடுக்க உருப்படியான  நடவடிக்கை
எடுக்க யாரும் தயாரில்லை

.
பிரச்சினை வரும்போது அறிக்கை விடும் கட்சிகள் பிரச்சினை தற்காலிகமாக அடங்கியவுடன் வேறொரு பிரச்சினையை கையிலெடுத்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதிலேயே இந்த ஐம்பது ஆண்டுகளாக காலத்தை கடத்தி கொண்டிருக்கின்றன

மின்சாரம் தமிழ் நாட்டில் கிடைத்தும் ,அதை முறையாக பயன்படுத்தாமல்,நிர்வாக சீர்கேடு ,மின்சக்தி கொண்டு செல்வதில் இழப்பு,இலவச மின்சாரம் ,ஊழல் நிர்வாகம் போன்றவற்றால் தமிழ் நாட்டு மக்கள் சந்திக்கும் இன்னல்கள் ஏராளம்
.

தமிழ் நாட்டு மக்கள்,சினிமா,சாராயம்,போதை,ஊழல் அரசியல்வாதிகளின் கவர்ச்சி இலவசங்கள் இவற்றில் மயங்கி எதிர்காலம் கேள்விக்குறியாய்
காலத்தை தள்ளுகின்றனர்


மற்ற மாநிலத்தவர்கள் இங்கு தங்கள் புத்தியை பயன்படுத்தி
ராஜபோக வாழ்க்கை வாழுகின்றனர்

தமிழன் எதற்கெடுத்தாலும் உணர்ச்சி வசப்பட்டு எதையும் சிந்திக்காமல்
வன்முறையில் இறங்கி தன் வாழ்க்கையை மட்டுமல்லாது தன்னை சார்ந்தவர்களின் வாழ்க்கையும் துன்பத்திற்கு ஆளாக்குகிறான்
.

இருப்பவர்களுக்கு ஒன்றும் காணோம்
இன்னும் எத்தனை காலத்திற்கு   பழம் பெருமை கொண்டிருப்பது?

லட்சகணக்கான தமிழர்கள் தங்க இடமில்லாமல் நடைபாதை ஓரம் கிடக்கிறார்கள்
அவர்களுக்கென்று ஒவ்வொரு நகரத்திலும் இரவு தங்க ஒரு இடம்
அமைத்து கொடுக்க எந்த அரசாவது நடவடிக்கை எடுத்ததுண்டா?

விவசாயம் மற்றும் சிறு தொழில்கள் நன்றாக நடைபெற தடையற்ற மின்சாரம்,கட்டமைப்பு வசதிகள் எந்த அரசாவது செய்ததுண்டா?
ஒளிவு மறைவற்ற ஊழலற்ற நிர்வாகம் நடைபெற .அரசியல்,இடை தரகர்கள் தலையீடு இல்லாத நிர்வாகத்தை தர எந்த அரசாவது முய்ற்சிததுண்டா?

ஏழை,நடுத்தர மக்களை பாதிக்கும் விலைவாசியை கட்டுபடுத்த நிலையான
நடவடிக்கை எந்த அரசாவது எடுத்ததுண்டா?


கட்சிகள் ஒன்றுகொன்று வசை பாடுவதும்,ஒருவருக்கொருவர் முட்டுக்கட்டை போடுவதும்,எல்லாவற்றிற்கும் விளம்பரம் தேடுவதுமாக இருந்தால் தமிழ்நாடு எப்போதுதான் உருப்படும்?
தமிழன் எப்போது எல்லா வளங்களும் பெற்று வாழ்வான் ?

சிந்திக்கவே இந்த பதிவு

யாரையும் குற்றம் சாட்ட அல்ல
courtesy Pic-google.